Sunday, January 10, 2010

அவர் மீண்டும் வருகிறார். பாகம் 1இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் அறையப்பட்ட காட்சி


இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு எடுத்து கொள்ளப்பட்ட காட்சி

இயேசுவின்
மகிமையானஇரண்டாம் (ரகசிய) வருகை


இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து, தாம் சென்ற இடமெல்லாம் நன்மைகள் செய்து வாழ்ந்து, மனிதர்களின் பாவங்களுக்காக பாடுபட்டு சிலுவையில் மரித்து:- இது பற்றி வீடியோ பதிவை பாருங்கள்:மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட்டு, ஐநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு உயிரோடு காட்சியளித்து, பரலோகத்திற்கு சென்று இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் ஆகிறது. இயேசு பரலோகத்திற்கு எடுத்துகொள்ளபட்டபோது அந்த சம்பவத்தை ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டிருந்த அவருடைய சீஷர்களிடம், தேவதூதர்கள் "நீங்கள் இப்படி வானத்தை பார்த்து கொண்டிருப்பது என்ன? இயேசு எப்படி பூமியிலிருந்து வானத்திற்கு எடுத்து கொள்ளபட்டாரோ, அப்படியே மீண்டும் பூமிக்கு திரும்புவார்" என்று . கிறிஸ்தவர்கள் பைபிளில் எழுதப்பட்டுள்ள இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி இயேசு கிறிஸ்து மீண்டும பூமிக்கு வருகிறார் என்று சொல்கிறார்கள். இன்று வரை இயேசு கிறிஸ்து பூமிக்கு திரும்ப வரவில்லை, இயேசுவை கடவுளாக நம்பாத மனிதர்கள், அவர் எப்போது வருவார், ஏன் இன்னும் வரவில்லை, எப்படி வருவார், வருவாரா? வரமாட்டாரா? என்றெல்லாம் கேலி செய்ய தொடங்கி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் ஏற்கெனவே பைபிளில் விடை சொல்லப்பட்டு விட்டது.3. முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,

4. அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்

தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.

5. பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும்,

6. அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.

7. இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.

8. பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.

9. தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

10. கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.


வரலாற்று ஆசிரியர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையமாக கொண்டு வரலாற்றை கி.மு., கி.பி. என்று இரண்டாக பிரித்துள்ளனர். எனவே இயேசு கிறிஸ்து பிறந்தது, வாழ்ந்தது, இறந்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தது, இவைகளெல்லாம் வரலாறு கூறும் உண்மைகள். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை தீர்கதரிசிகள் பலர் முன்னறிவித்துள்ளனர்.


தீர்கதரிசனங்களின்படி பார்த்தால் இயேசு கிறிஸ்து இரண்டாவது முறை பூமிக்கு வருவார், இயேசுவின் இரண்டாம் வருகை பற்றி வேதத்தில் 318முறை முன்னறிவிக்கபட்டுள்ளது. பூமிக்கு வருவார் என்று தெரிகிறது. இதில் முதல் முறை பாவிகளை ரட்சிப்பதற்காக தேவகுமாரனாகிய இயேசு மனித ரூபத்தில் பூமியில் பிறந்தார். தன்னுடைய இரண்டாம் பற்றி இயேசு மிக தெளிவாக கூறியிருப்பது:
இயேசு கிறிஸ்து:
அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம்அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள் .
நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையின் நோக்கம் பாவிகளின் இரட்சிப்பு, மற்றும் அவர்களை நல்வழியில் நடத்தி முடிவில் பரலோக ராஜ்யத்தில் சேர்பதாகும். வேதத்தில் இயேசு கிறிஸ்து கூறியிருப்பதை பார்க்கும்போது இயேசு இந்த நாளில் இந்த நேரத்தில் மீண்டும் பூமிக்கு வருவார் என்று யாராலும் கணித்து சொல்ல முடியாது. ஆனால், இப்போது உலகத்தில் நடந்து வருகிற சம்பவங்களை எல்லாம் பார்த்தால் இயேசுவின் வருகை மிக சீக்கிரத்தில் நடக்கும் என்று சொல்ல முடியும்.

இது பற்றி வீடியோ பதிவை பாருங்கள்:ரகசிய வருகை:

இயேசுவின் இரண்டாம் வருகை இரண்டு கட்டமாக நடக்கும் என்று வேதத்தை ஆதாரமாக கொண்டு சொல்லலாம். முதல் கட்டமாக ரகசிய வருகையும், இரண்டாம் கட்டமாக பகிரங்க வருகையும் நடக்கும். ரகசிய வருகையில் இயேசு கிறிஸ்து தன்னை ஏற்று கொண்டு பாவமன்னிப்பு பெற்று பரிசுத்த வாழ்கை வாழும் மக்களை மத்திய வானத்தில் கூட்டி சேர்ப்பார். இந்த ரகசிய வருகை கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விடும். ரகசிய வருகை நாம் வாழும் நாட்களில் கூட நடக்கலாம். ஒரு நொடியில் இயேசுவின் விசுவாசிகள் எடுத்து கொள்ளபடுவார்கள். இது பற்றி வீடியோ பதிவை பாருங்கள்:பகிரங்க வருகை:

இரண்டாம் கட்டமாக பகிரங்க வருகையில் முதலாவது இயேசுவுக்காக வாழ்ந்து இறந்து அடக்கம் பண்ணப்பட்டவர்கள் உயிரோடு எழுப்பபடுவார்கள். அதே சமயம் இயேசுவுக்காக பூமியில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மருரூபமடைந்து இயேசுவோடு இணைவார்கள். (1 தெச - 4-17,18) இந்த பகிரங்க வருகை பற்றி சகரியா தீர்க்கதரிசன புத்தகம் 14ஆம் அதிகாரம் மற்றும் வெளிபடுத்தின விசேஷம் புத்தகத்திலும் படிக்கலாம்.

இந்த ரகசிய வருகைக்கு பின்பு, பூமியில் மஹா பயங்கரமான உபத்திரவ காலம் துவங்கும். இந்த காலத்தில் ஒரு தந்திரமான சர்வாதிகாரி எழும்புவான், இவனை அந்தி கிறிஸ்து என்று வேதம் சொல்கிறது. இவன் பூமியின் ஜனங்கள் யாவரும் தன்னை கடவுளாக ஏற்றுக்கொண்டு வணங்கும்படி செய்வான். இவனுடைய காலத்தில் இவனுக்கு தெரியாமல் யாரும் எதுவும் வாங்கவோ, விற்கவோ முடியாதபடி எல்லா மக்களின் தலையில் அல்லது கை மணிகட்டில் ஒரு முத்திரை பதிக்கப்படும். இந்த முத்திரையை ஏற்று கொள்ளாதவர்கள் பூமியில் வாழ்வது மிக கடினமாகி விடும். இந்த முத்திரை மிகச்சிறிய எலெக்ட்ரானிக் சிப் ஆக இருக்கலாம்.
அந்தி கிறிஸ்துவின் ஆட்சி பூமியில் ஏழு வருடங்கள் நடக்கும் என்று வேதம் சொல்கிறது. இதில் முதல் மூன்றரை வருடங்கள் அந்தி கிறிஸ்து இஸ்ரவேல் மக்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னை உலகத்தின் சமாதான தூதன் போல காட்டுவான். அனால் மூன்றரை வருடம் சென்ற பின்பு அவன் சுயரூபம் தெரிய வரும். இஸ்ரவேல் மக்களோடு செய்யப்பட்ட சமாதான ஒப்பந்தத்தை முறித்து கொண்டு அவர்களை அளிக்கவும், கொடுமைபடுத்தவும் தொடங்குவான். இந்த காலத்தில் மக்கள் இவன் பொய்யான மேசியா என்று அறிந்து கொண்டு இயேசு கிறிஸ்துவே உண்மையான மேசியா (ரட்சகர்) என்று புரிந்து கொள்வார்கள். அந்தி கிறிஸ்துவின் ஏழு வருட ஆட்சியின் முடிவில், மிக பயங்கரமான யுத்தம் பூமியில் தொடங்கும். இந்த யுத்தம் ஆர்மகெடான் யுத்தம் என்று அழைக்கப்படும். வெளி (16:16) இந்த யுத்தத்தின் முடிவில் அந்தி கிறிஸ்து அழிக்கபடுவான், சாத்தான் பாதாளத்தில் சங்கிலிகளால் கட்டபட்டு சிறை வைக்கபடுவான். இது மஹா உபத்திரவ காலத்தின் முடிவு ஆகும். இதன் பின் இயேசு கிறிஸ்துவின் 1000 வருட பொற்கால ஆட்சி பூமியில் துவங்கும். இது வெளிபடுத்தின விசேஷம் 20 ஆம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ளது.


யுத்தங்கள், தீவிரவாத தாக்குதல்கள், பூமியதிர்ச்சிகள், சுனாமி, உலகமெங்கும் பொருளாதார மந்தநிலை, அதிகரித்து வரும் குற்றங்கள், மற்றும் இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் நாட்டில் ஒன்றாக சேர்ந்து சாலமன் கட்டிய தேவாலயத்தை மீண்டும் கட்ட முயற்சித்து கொண்டிருப்பது போன்ற சம்பவங்கள் இயேசுவின் இரண்டாம் வருகை மிக சமீபமாய் என்பதை சொல்லாமல் சொல்கின்றது.

மஹா உபத்திரவ காலம் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டு பாவமன்னிப்பு பெற்று பரிசுத்தமாய் வாழ்பவர்களுக்கு கிடையாது. ஏனென்றால், அவர்கள் பாவங்கள் ஏசுவால் மன்னிக்கப்பட்டுவிட்டது. ஆகவே இவர்கள் இயேசுவின் ரகசிய வருகையில் (அந்தி கிறிஸ்து ஆட்சிக்கு முன்பு) மத்திய வானத்திற்கு எடுத்து கொள்ளபடுவார்கள். இவர்களுக்கு நியாயந்தீர்ப்பு கிடையாது ஏனெனில், இவர்கள் இயேசுவின் ரத்தத்தால் கழுவப்பட்டு, பாவமன்னிப்பு பெற்று விட்டார்கள். இவர்களுக்கு பூமியில் இயேசுவுக்காக உண்மையாக வாழ்ந்திருந்தால் பரலோகத்தில் ஜீவகிரீடம் சூட்டப்படுவார்கள். இது பற்றி வீடியோ பதிவை பாருங்கள்:

Jesus Christ - The Second Coming

இயேசு கிறிஸ்துவின் பகிரங்க வருகையில் அந்தி கிறிஸ்துவின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு அந்தி கிறிஸ்து அழிக்கபடுவான், பின்பு இயேசு கிறிஸ்துவின் 1000 வருட பொற்கால ஆட்சி பூமியில் துவங்கும். இந்த காலத்தில் பூமியின் ஜனங்கள் எல்லோரும் உண்மையான தேவனாகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினால் நிறைந்திருப்பார்கள். பூமியின் மத்தியில் எருசலேமை தலைநகரமாக கொண்டு இயேசுவின் ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்.

இயேசுவின் ஆயிரம் வருஷ ஆட்சியின் முடிவில் சாத்தான் பாதாளத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டு பூமியின் ஜனங்களில் பெரும் பகுதியினரை தன்னோடு வஞ்சகமாக சேர்த்து கொண்டு தேவனுக்கு விரோதமாய் வருவான் ஆனால், தேவன் தம்முடைய நாசியின் சுவாசத்தால் அவனை அழிப்பார் என்று வேதம் சொல்கிறது. சொல்கிறது.

தேவன் அக்கினியால் இந்த பூமியை பரிசுத்தமாக்குவார். பூமியில் இயேசுவை தங்கள் ரட்சகராக ஏற்று கொள்ளாமல் பாவ மன்னிப்பு பெறாமல் தங்கள் இஷ்டம் போல் பாவ வாழ்க்கை நடத்தியவர்கள் சாத்தானோடு சேர்த்து அக்கினியும், கந்தகமும், எரிகிற கடலில் வீசபடுவார்கள். இதை இரண்டாம் மரணம் என்று வேதம் சொல்கிறது.

இயேசு கிறிஸ்துவின் முதல் வருகை பற்றி தீர்கதரிசிகளால் எழுதப்பட்டபடி நடந்து முடிந்து விட்டது. எப்படி முதல் வருகை நிகழ்ந்து முடிந்ததோ அது போல் இயேசுவின் இரண்டாம் வருகையும் நடக்கும் என்பது உறுதி.
நீங்கள் மஹா உபத்திரவ காலத்தில், அந்தி கிறிஸ்துவின் ஆட்சிக்கு தப்பி பரலோக வாழ்வை பெற விரும்பினால் தாமதிக்காமல் இயேசுவை உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி கேளுங்கள். அவர் உயிருள்ள, மெய்யான, இரக்கமுள்ள தேவன், அவர் உங்கள் பாவங்களை மன்னித்து உங்களை தம் பரிசுத்த ரத்தத்தினால் கழுவி பரிசுத்தமாக்குவார். நீங்கள் இயேசுவை அவருடைய ரகசிய வருகையில் சந்திக்க ஆயத்தபடுங்கள். இதுவரை நீங்கள் பாவ வாழ்க்கை வாழ்ந்து வந்திருந்தால் இன்று மனந்திரும்பி இயேசுவை ஏற்று கொள்ளுங்கள். இந்த உலகம் தர முடியாத சந்தோஷமும், சமாதானமும் உங்கள் உள்ளத்தில் ஏசுவால் மட்டுமே தர முடியும். இயேசுவை இருதயத்தில் ஏற்று கொண்டு பரிசுத்த வாழ்க்கை வாழுங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து காப்பாராக. தேவனுக்கே மகிமை.

பாவங்கள் நம்மை விட்டு போக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

1.
முதலாவது நீங்கள் ஒரு பாவி என்று உணர்ந்து (உண்மையாக உங்கள் உள்ளத்திலிருந்து) கடவுளிடம் ஒத்து கொள்ளுங்கள்.

2.
இது நாள் வரை செய்து வந்த பாவங்கள் எல்லாவற்றையும் இயேசுவிடம் உள்ளம் உடைந்து, அறிக்கை செய்து (சொல்லி), அந்த பாவங்களை இயேசு மன்னிக்கும்படியாக வேண்டுங்கள்.

3.
கீழ்கண்டபடி ஜெபியுங்கள்:

"
இயேசுவே, நான் ஒரு பாவி என்று உணர்கிறேன். இயேசுவே, நான் செய்த பாவங்களை எனக்கு மன்னியுங்கள், இயேசுவே கல்வாரி சிலுவையில் என் பாவங்களை போக்கும்படியாக நீர் எனக்காக சிந்திய உம்முடைய பரிசுத்த ரத்தத்தினால் என்னை கழுவி சுத்தம் செய்யும்.

நான் இனி பாவம் செய்யாமல் வாழ இயேசுவே நீர் எனக்கு உதவி செய்யும். என்னுடைய உள்ளத்தில் நீர் வந்து வாழும். என்னோடிருந்து என்னை பரிசுத்தமாக்கி, ஆசிர்வதியும், உமக்காக வாழ எனக்கு உதவி செய்யும்."- இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.

இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த நோய்கள், துன்பங்கள், மன குழப்பங்கள், பிரச்சினைகள் நிச்சயமாக இயேசு நீக்கி விடுவார்.

"
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்"